Shadow

Tag: Jyostar Enterprises

“ஹன்சிகாவிற்கான கதை” – இயக்குநர் ஜமீல்

“ஹன்சிகாவிற்கான கதை” – இயக்குநர் ஜமீல்

சினிமா, திரைத் துளி
ஹன்சிகா மோத்வானி பிரதான கதாப்பாத்திரத்தில் நடிக்கும் புதிய பெயரிடப்படாத படத்தை அறிவித்திருக்கிறது ஜியோஸ்டார் எண்டர்பிரைசஸ். இதுவரை ஜாலியான பெண் கதாபாத்திரங்களையே ஏற்று நடித்து வந்த ஹன்சிகா, மிகுந்த ஈடுபாடும் அர்ப்பணிப்பும் உள்ள ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். சவாலான அக்கதாபாத்திரத்தை ஏற்று நேர்த்தியாக நடிப்பதற்காக தற்போது ஹோம் வொர்க் செய்து வருகிறார். நாயகியை மையப்படுத்திச் சுழலும் இந்த த்ரில்லர் கதையில் மிகவும் பவர்ஃபுல்லான நடிப்பை வெளிப்படுத்த இருக்கிறார் ஹன்சிகா. மசாலா படம், ரோமியோ ஜூலியட், போகன் படங்களில் இணை இயக்குநராகப் பணிபுரிந்த ஜமீல் கதை, திரைக்கதை எழுதிப் படத்தை இயக்குகிறார். வணிக மற்றும் தொழில்நுட்ப விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படம் தயாராக இருக்கிறது. “ரசிகர்கள் பார்க்க விரும்பும் வகையில் வணிக ரீதியில் திரைக்கதையை மேம்படுத்த நிறைய உழைப்பைக் கொடுத்திருக்...