Shadow

Tag: Ka Ka Po Vimarsanam

காதலும் கடந்து போகும் விமர்சனம்

காதலும் கடந்து போகும் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நெட்வொர்க்கிங்கில் வேலை தேடும் யாழினியும், அடியாளாக இருக்கும் கதிரும் எதிரெதிர் வீட்டில் வசிக்கின்றனர். அவர்களுக்குள் ஏற்படும் அறிமுகமும், நட்புமுமே படத்தின் கதை. வசனங்களில் நகைச்சுவை இருந்தாலும், படம் ஆங்காங்கே, குறிப்பாக முடியும் வேளையில் மனதை வருடிச் செல்கிறது. 'உனக்கொரு வாழ்க்கை உண்டு' எனச் சொல்லி, ஒருவனுக்கு மூளைச்சலவை செய்யப்படும் பொழுது, மெல்ல பதற்றம் எட்டிப் பார்க்கிறது. எல்லா மூளைச்சலவைக்கும் பின்னும் ஓர் அழகான கனவு தூண்டிலாக்கப்படும். உலகைச் சூழ்ந்துள்ள பெரும் அபாயங்களின் சிறு விதை இப்படித்தான் முளைக்கிறது. அப்படி, 'தாம் உபயோகிக்கப்படுத்தப் பட்டுள்ளோம்' என்ற உண்மையை சலவை செய்யப்பட்டவர்கள் உணரும் பொழுது ஏற்படும் வலி என்பது மிக மிகக் கொடியதாக இருக்கும். அது தன்னைப் போல் பிறருக்கும் ஏற்பட்டு விடக்கூடாதென்ற மனமிருக்கில்லையா..!? அதை கமலின் மொழியில் சொல்வதென்றால், 'அப்படிப்பட்ட மனம் வ...