
காலா விமர்சனம்
மும்பையின் மத்தியில் இருக்கும் தாராவி எனும் சேரிப்பகுதி கரிகாலனின் கோட்டையாக விளங்குகிறது. அதைத் தரைமட்டமாகிக் கட்டடங்களாக்குவது தான் அரசியல்வாதி ஹரி தாதாவின் 'ப்யூர் மும்பை' திட்டத்தின் நோக்கம். சாமானிய மக்களின் பாதுகாவலனாக விளங்கும் காலாவிற்கும், மும்பையின் மொத்த அதிகாரத்தையும் கைக்குள் கொண்டுள்ள ஹரி தாதாவிற்கும் நடக்கும் போர் தான் 'காலா'.
ஆம், படத்தின் இடைவேளையின் பொழுது போர் தொடங்குகிறது. தாராவியின் சிஸ்டம் ஸ்தம்பிக்கிறது. காலா, மக்களை ஒருங்கிணைத்து உள்ளிருப்புப் போராட்டம் நடத்துகின்றார். அதில் சமூக விரோதிகள் என்ட்டரியாகி விடுகின்றனர். மக்கள் போராட்டத்தைப் போலீஸார் அடாவடியாகக் கலைக்கின்றனர். கருப்பு மலர்கிறது. சுபம்.
பில்டப் அளவிற்கு, காலா பாத்திரத்தை வலுவானதாய்ச் சித்தரிக்காததோடு, பில்டப்பே இன்றி ஹரி தாதா பாத்திரத்தை மிக அழகாகச் செதுக்கியுள்ளார் ரஞ்சித். ஹரி தாதாவாய் நானா படேகர் பிர...


