Shadow

Tag: Kaavalthurai Ungal Nanban movie review

காவல்துறை உங்கள் நண்பன் விமர்சனம்

காவல்துறை உங்கள் நண்பன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இந்தப் படத்திற்குள் தன்னை இணைத்துக் கொண்ட இயக்குநர் வெற்றிமாறன், அதற்கான காரணமாக, 'இது ஒரு மரியாதையான முயற்சி' என்றார். சாத்தாங்குளம் இரட்டைக் கொலை சம்பவம் ஏற்படுத்திய அதிர்வை நினைவுறுத்துகிறது படம். மேலே உள்ள அந்தப் போஸ்டரே அதற்கு சாட்சி. லாக்கப் மரணம், கஸ்டடியல் வயலன்ஸ் என போலீஸின் அராஜகப் பக்கங்களில் ஒன்றை அழுத்தமாகப் பதிந்துள்ளது படம். இரு உருளை வண்டியில் மனைவியுடன் வரும் பிரபுவைக் காவல்துறை மறித்து விசாரிக்கின்றனர். ஆவணங்களை சரியாக வைத்திருந்தும், 'குடித்துள்ளார்; RC புக் இல்லை' என எனச் சொல்லி பிரபுவை கைது செய்கிறது போலீஸ். அதன் பின், பிரபுவை அடிபணிய வைத்து, அலைகழித்து, அவனது வாழ்வைக் கேள்விக்குறியாக்கி, சீர்குலைத்து சொல்லொண்ணாத் துன்பத்திற்கு ஆட்படுத்துகிறது, பொதுமக்களின் ஊழியரும் நண்பரும் பாதுகாவலருமான போலீஸ். இன்ஸ்பெக்டர் கண்ணபிரானாக மைம் கோபி வெறுப்பைச் சம்பாதித்துள்ளார். படத...