கபடதாரியில் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி
சிபிராஜ் நடிப்பில் உருவாகி வரும் ‘கபடதாரி’ படத்தில், சத்யா பட இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி நடிகராக அறிமுகமாவதாகத் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ் சார்பில் G.தனஞ்செயன் இது குறித்து கூறியதாவது, “கபடதாரி எங்கள் அனைவரின் மனதிற்கும் மிக நெருக்கமான படைப்பு. இப்படத்தின் கதை பற்றி அறிந்த கணத்திலிருந்தே படத்தின் மீது பெரும் ஈர்ப்பு உண்டாகிவிட்டது. இந்தப் படத்தில் நாங்கள் பங்கு கொண்ட கணத்திலிருந்தே இப்படைப்பு அனைவரிடத்திலும் மிகப் பெரும் உற்சாகத்தை அள்ளித் தெளித்துள்ளது. படத்தில் நடித்து வரும் அனைவருமே தங்கள் முழுத் திறமையையும் கொட்டி தங்கள் கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டியுள்ளார்கள். இக்கதையில் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்திற்கு நல்ல உடற்கட்டுடன், ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கக் கூடிய நடிகர் தேவைப்பட்டார். படக்குழுவுடன் இணைந்து பலரை மனதில் கொண்ட...