32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

கபடதாரியில் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி

Dinesh R சேலம் Published: 25/02/2020 2 நிமிட வாசிப்பு Updated: 22/04/2020 சினிமா
எழுத்து அளவு:

pradeep-krishnamoorthy-in-kabadathari

சிபிராஜ் நடிப்பில் உருவாகி வரும் ‘கபடதாரி’ படத்தில், சத்யா பட இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி நடிகராக அறிமுகமாவதாகத் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

கிரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ் சார்பில் G.தனஞ்செயன் இது குறித்து கூறியதாவது, “கபடதாரி எங்கள் அனைவரின் மனதிற்கும் மிக நெருக்கமான படைப்பு. இப்படத்தின் கதை பற்றி அறிந்த கணத்திலிருந்தே படத்தின் மீது பெரும் ஈர்ப்பு உண்டாகிவிட்டது. இந்தப் படத்தில் நாங்கள் பங்கு கொண்ட கணத்திலிருந்தே இப்படைப்பு அனைவரிடத்திலும் மிகப் பெரும் உற்சாகத்தை அள்ளித் தெளித்துள்ளது. படத்தில் நடித்து வரும் அனைவருமே தங்கள் முழுத் திறமையையும் கொட்டி தங்கள் கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டியுள்ளார்கள். இக்கதையில் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்திற்கு நல்ல உடற்கட்டுடன், ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கக் கூடிய நடிகர் தேவைப்பட்டார். படக்குழுவுடன் இணைந்து பலரை மனதில் கொண்டு, யாரை நடிக்க வைக்கலாம் என விவாதித்தோம். இறுதியாக இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இந்தக் கதாபாத்திரத்தை அருமையாகக் கையாள்வார் என எனக்குத் தோன்றியது. ஆனால் அவர் அரிதாரம் பூச சம்மதிக்கவில்லை. பெரும் வற்புறுத்தலுக்கு பின் எங்கள் மீதான அன்பில் அவர் ஒத்துக் கொண்டார். அவருடைய கதாபாத்திரம் கதையை அடுத்த தளத்திற்குக் கொண்டு செல்லும் மிக முக்கிய பாத்திரம் ஆகும். படத்தில் மிக அழுத்தமான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக அந்தக் கதாபாத்திரம் இருக்கும். இப்படத்திற்குப் பிறகு இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகராக வருவார் என எனக்குப் பெரும் நம்பிக்கை இருக்கிறது” என்றார்.

லலிதா தனஞ்செயன் இத்திரைப்படத்தைத் தயாரிக்க, சிபிராஜ் நாயகனாக நடிக்க, நந்திதா ஸ்வேதா நாயகியாக நடிக்கிறார். நாசர், ஜெயப்பிரகாஷ், J.சதீஷ் குமார் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். சைமன் K. கிங் இசையமைக்கிறார். ராசாமதி ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் K.L. படத்தொகுப்பு செய்கிறார். விதேஷ் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார். M.ஹேமந்த் ராவ் கதையைத் தழுவல் திரைக்கதை, வசனத்தை ஜான் மகேந்திரன் மற்றும் தனஞ்செயன் எழுதியுள்ளனர்.

இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடந்து வரும் வேளையில் வரும் 2020 கோடை விடுமுறையில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.