Shadow

Tag: Kadhal ambu movie

அரசியல்வாதிகளை விடச் சினிமாக்காரர்களுக்குப் பொறுப்பு அதிகம் – பேரரசு

அரசியல்வாதிகளை விடச் சினிமாக்காரர்களுக்குப் பொறுப்பு அதிகம் – பேரரசு

சினிமா, திரைச் செய்தி
காதல் அம்பு எனும் படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இவ்விழாவில் பேசிய நடிகர் ஆரி, “இப்படத்தில் நடித்தவர்கள், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று அனைவரும் புதுமுகங்கள். இவர்களைப் போல் இன்னும் நிறைய பேர் வரவேண்டும். இரண்டு மூன்று நாட்களாக, கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்று அந்நிகழ்ச்சியைப் பற்றியே அனைவரும் பேசுகின்றனர். ஆனால், இந்த விஷயங்களைத் தாண்டி நாம் பேச வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. அது சுபஸ்ரீயின் மரணம் தான். யாருக்கோ வைத்த பேனர் அது காற்றடித்ததில், அவ்வழியாக சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது விழுந்து, விபத்துக்குள்ளாக்கி இறந்துவிட்டார். இந்த விபத்திற்குப் பிறகு திமுக-வின் தலைவர் மு.க.ஸ்டாலின் இனிமேல் எங்கள் கட்சி விழாவிற்கு பேனர் வைக்கமாட்டோம் என்று கூறியிருக்கிறார்...