![காதல் காதல்தான் – ராம் கோபால் வர்மாவின் லெஸ்பியன் க்ரைம் த்ரில்லர்](https://ithutamil.com/wp-content/uploads/2022/03/kadhal-kadhalthan-press-meet.jpg)
காதல் காதல்தான் – ராம் கோபால் வர்மாவின் லெஸ்பியன் க்ரைம் த்ரில்லர்
இந்தியத் திரைப்பட வரலாற்றில் வியத்தகு மாற்றங்களைத் தந்த இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் சமீபத்திய திரைப்படம் ‘காதல் காதல்தான்’. ஆண்களை வெறுக்கும் இரு பெண்களுக்குள் காதல் வர, ஓர் பாலின காதலைக் காப்பாற்றிக் கொள்ள அவர்கள் போராடுவதே இந்தப் படம்.
இந்தியாவின் முதல் லெஸ்பியன் க்ரைம் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. Artsee Media / Rimpy Arts International இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இந்தி மொழியில் தயாரான இப்படம் ஏப்ரல் 8 ஆம் தேதி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. தமிழ்ப் பதிப்பின் முன் வெளியீட்டை ஒட்டி, இயக்குநர் ராம் கோபால் வர்மா, நாயகிகள் நைனா கங்குலி, அப்சரா ஆகியோர் மார்ச் 30 அன்று சென்னையில் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.
நாயகி நைனா கங்குலி, "ராம் கோபால் வர்மா சார், என் மீது நம்பிக்கை வைத்து என்னை தெலுங்குப் படத்தில் அறிமுகப்படுத்தினார். இப்போது புதுமையான முயற...