
கைதி விமர்சனம்
போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளை மீட்க ஒரு குழு கமிஷ்ணர் அலுவலகத்தை முற்றுகையிடுகிறது; போதையூட்டப்பட்ட போலீஸ் உயரதிகாரிகளை லாரியில் ஏற்றி மருத்துவமனையில் சேர்க்க ஸ்பெஷல் டாஸ்க் ஃபோர்ஸ் அதிகாரியான பிஜோய், லாரி ஓட்டக்கூடிய டில்லி எனும் சிறையில் இருந்து விடுதலையான நபரின் உதவியை நாடுகிறார்; அந்த லாரியில் இருக்கும் 5 அதிகாரிகளை மட்டும் கொல்ல பல குழுக்கள் வட்டமிடுகின்றன.
கதாநாயகி இல்லாத படம்; அதனால் டூயட்டும் இல்லை; ஓரிரவில் நடக்கும் கதை என வழக்கமான படத்திலிருந்து மிக ஃப்ரெஷான மேக்கிங்கில் கவர்ந்துள்ளார் லோகேஷ் கனகராஜ். ஆனால், மீடியாவிற்குச் செய்தி கசிந்துவிடும் என அஞ்சி கமிஷ்ணர் ஆஃபீஸைப் பாதுகாக்க பேட்டலியனின் உதவியை நாட மாட்டேங்கிறார் பிஜோய் என கதை விட்டுள்ளதை ஏற்க முடியவில்லை. போலீஸ் என்ன சொல்லுகிறதோ அது தானே செய்தி? இரவில் எமர்ஜென்சிக்குப் பத்திருபது காவலர்களைக் கூட கமிஷ்ணர் ஆஃ...


