தலைமை செயலகம் விமர்சனம்
என்றோ செய்த ஊழல், ஆளும் முதல்வரின் கழுத்தை நெறுக்க, முதல்வரின் கைத்தடிகள் இந்தச் சூழலைப் பயன்படுத்தி அடுத்த முதல்வராவதற்கு காய் நகர்த்த, அதே நேரம் 15 ஆண்டுகளுக்கு முன்பு வட இந்தியாவில் பன்சால் மற்றும் அவன் கூட்டாளிகள் ஐவரைக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்ற கௌலைகாரி துர்காவைத் தேடும் வழக்கு போலீஸ் இடமிருந்து சி.பி.ஐ.-க்கு மாற்றப்படுகிறது. இந்த வட இந்திய மற்றும் தென் இந்திய நிகழ்விற்குமான தொடர்பு என்ன என்பதே இந்த தலைமை(ச்) செயலகம் இணைய தொடரின் கதை.
ராடன் நிறுவனம் சார்பில் ராதிகா சரத்குமாரும், சரத்குமாரும் தயாரித்திருக்கும் இந்தத் தொடரை வசந்த பாலன் இயக்கி இருக்கிறார். கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, ரம்யா நம்பீசன், பரத், ஆதித்யா மேனன், சந்தான பாரதி, கவிதா பாரதி போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள்.
எப்போதோ செய்த ஊழல் வழக்கில் சிறைக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலையில் ...