சூர்யா வெளியிட்ட கன்னி மாடம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
நடிகர் போஸ் வெங்கட் தன் திரைவாழ்வில் அடுத்த கட்ட பயணத்தை இயக்குநராகத் துவங்கி உள்ளார். இயக்குநர் அவதாரத்தால் மிக உத்வேகத்துடனும் மகிழ்ச்சியாகவும் உள்ள போஸ் வெங்கட் தன் 'கன்னி மாடம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டதில் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்.
கன்னி மாடம் ஃபர்ஸ்ட் லுக் பற்றி, "இப்படத்தின் டிசைன்ஸ் பார்ப்பதற்குத் தனித்துவமாக, அனைவரையும் கவர்ந்துள்ளதில் மகிழ்ச்சி. “நல்ல உள்ளம் கொண்ட நடிகர் சூர்யா இதில் பங்கேற்க வில்லை என்றால், இது சாத்தியப்பட்டிருக்காது. எங்களுக்கு ஆதரவாக இருந்து இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டதற்கு நாங்கள் சூர்யாவிற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மக்களிடமிருந்து அமோக வரவேற்பு கிடைத்ததினால் நாங்கள் கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.
நான் சென்னையில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கும் போது என் வாழ்க்கையில் நடந்த மற்றும் நான் எதிர்கொண்ட ...