Shadow

Tag: Kantara: Chapter 1 thirai vimarsanam

Kantara: Chapter 1 விமர்சனம்

Kantara: Chapter 1 விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
காந்தாரா படத்தின் ப்ரீக்வலாக சாப்டர் 1 வந்துள்ளது. முந்தைய படத்தில், பூதகோலா ஆட்டத்தில் நாயகனின் தந்தை மறைந்த இடத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி இப்படத்தின் கதை விவரிக்கிறது. காந்தாராவிலுள்ள ஈஸ்வரன் பூந்தோட்டம் எனும் காட்டை ஈஸ்வர கணங்களே பாதுகாக்கின்றன. அங்கு விளையும் மிளகு, பாங்காரா தேசத்து மன்னனை ஈர்க்கிறது. அமானுஷயச் சக்திகளால் பாங்காரா தேசத்து மன்னன் கொல்லப்படுகிறான். காந்தாராவிலுள்ள ஒரு கிணற்றில் பெர்மி (Bermi) கண்டெடுக்கப்படுகிறான். அவன் இளைஞன் ஆனதும், எல்லா மக்களும் சமம் என்ற கருத்தில் ஊன்றி, பாங்காரா தேசத்து துறைமுகத்தை வரிகளற்று அனைவருக்கும் திறந்துவிடுகிறான். அவனது செய்கையால் கோபப்படும் குலசேகரன் எனும் பாங்காரா மன்னன் (காந்தாராவில் கொல்லப்பட்டவரின் பேரன்), காந்தாராவைத் தீக்கிரைக்காகிறான். கடவுள்களால் பாதுகாக்கப்படும் காந்தாராவின் எதிர்வினைதான் படத்தின் முடிவு. கனகவதியாக ருக்மிணி...