Shadow

Tag: Karuppan review

கருப்பன் விமர்சனம்

கருப்பன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மாடு அணையும் முரட்டு வீரனான கருப்பனுக்குத் தன் தங்கை அன்புச்செல்வியைத் திருமணம் செய்து வைக்கிறார் மாயி. கண் பார்வையற்ற கருப்பனின் தாயை அன்புச்செல்வி பிரியமாகப் பார்த்துக் கொள்வதால், படிப்பறிவுள்ள தன் பணக்கார மனைவி மீது ஓவர் காதலுடன் இருக்கிறார் படிக்காத ஏழை கருப்பன். அன்புச்செல்வியை ஒருதலையாகக் காதலிக்கும் கதிர் அவர்களைப் பிரித்து விடுகிறான். கருப்பன் மீண்டும் தன் மனைவியுடன் எப்படிச் சேர்ந்தார் என்பதே படத்தின் கதை. வீரம், காதல், வஞ்சம், பிரிவு, துக்கம், சுபம் என கதை ஓட்டம் மிக எளிமையாகவும் பரீச்சயமாகவும் இருக்கிறது. அதனை மீறி சுவாரசியப்படுத்துவது படத்தின் கதைமாந்தர்கள் தான். சிங்கம்புலியைக் கூட ரசிக்கும்படி திரையில் உலவ விட்டுள்ளதே இயக்குநர் பன்னீர் செல்வத்தின் வெற்றி. குடித்து விட்டு எம்.ஜி.ஆர். பாடல்களுக்கு சிங்கம்புலியுடன் ஆட்டம் போடும் காட்சி சூப்பர். அது அப்படியே நீண்டு, 'ஆலுமா டோல...