கோபமும் ஆதங்கமுமாக கோ-2 பாபி சிம்ஹா
ஆர்.எஸ்.இன்ஃபோடெய்ன்மென்ட் தயாரிக்கும் கோ – 2 படத்தின் பாடல்கள் ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளது. பாபி சிம்ஹாவிற்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார்.
இயக்குநர் விஷ்ணுவர்தனின் ‘பில்லா’, இயக்குநர் சக்ரி டோலேட்டியுடன் ‘பில்லா’ 2 முதலிய படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியுள்ள சரத் ,இந்தப் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
'இந்தப் படத்தில் நான் ஒரு துடிப்புள்ள, உணர்ச்சிகரமான பத்திரிகையாளன் வேடத்தில் நடிக்கிறேன். அந்த மாநிலத்தில் உள்ள சக்தி வாய்ந்த ஒருவருடன் என் சுயநலம் அப்பாற்பட்ட ஒரு விஷயத்தில் நான் போராடும் காட்சிகள் மிக அழகாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. தப்பென்று பட்டால் யாரென்று பாராமல் போராடும் இந்தக் கதாபாத்திரம் ஏறக்குறைய என்னுடைய குணத்தை ஒட்டியிருப்பது எனக்குப் பெருமைதான். 'கோ 2' படத்தில் என்னுடைய இந்தக் கதாபாத்திரம் இன்றைய இளைஞர்களின் கோபத்தையும் ஆதங்கத்தையும் தெள்ளத் தெளிவாக...