
கோச்சடையான் விமர்சனம்
இந்தியாவின் முதல் முழு நீள மோஷன்-கேப்ச்சர் படம், அதற்கே உரிய மழலை நடையோடு திரையில் அழகாய்த் தத்தித் தாவிப் பிரேவசித்துள்ளது.
ராணா எனும் கோச்சடையான் ரணதீரன், தனது தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதோடு அவரது மரணத்திற்கும் பழிவாங்குதுதான் படத்தின் கதை.
கதையை எழுதியவர் கே.எஸ்.ரவிக்குமார். அதுவும் ராஜா காலத்துக் கதை என்பதால், அவரது வழக்கமான பாணியில் அப்பா ரஜினி, அண்ணன் ரஜினி, தம்பி ரஜினி என ரஜினிகளை வரிசையாகக் கதையில் இறக்கியுள்ளார். திருப்பங்கள் பல நிறைந்த மிகச் சுவாரசியமான திரைக்கதை. ஆனால் அதை உள் வாங்கிக் கொள்ள முடியாமல், புது விதமான காட்சி அனுபவம் நம்மை ஆக்கிரமித்துக் கொள்கிறது. ரஜினி, நாகேஷ், ஜாக்கி ஷெராஃப், நாசர், ஷோபனா, ஆதி தவிர வேறு எவரையும் சட்டென்று அடையாளம் காண முடியவில்லை. படத்தில் வரும் வீரர்கள், ஊர் மக்கள் என இதர கதாபாத்திரங்கள் அனைவரின் முகமும் மெழுகு பூசினாற்போலவே உள்ளது. ராணா...


