கொடிவீரன் விமர்சனம்
கொடிவீரன் எனும் பெயர் கொண்ட சாமியாடியின் அருள்வாக்கு பலிதம் ஆகிறது. தீர்க்கதரிசணங்கள் நிகழ்ந்தே தீரும் என்ற மனிதனின் ஆதி நம்பிக்கை தான் படத்தின் மையச் சரடு. வீரன் என்பதை நாயகன் கொடிவீரன் என்றும், கொடி என்பதை அவன் மனம் கவர்ந்த மலர்க்கொடி என்றும் கூடத் தலைப்பினைப் பொருள் கொள்ளலாம். ஆனால், கொடிவீரனுக்கும் அவன் தங்கை பார்வதிக்கும் உள்ள பாசப்பிணைப்புத்தான் கொடிவீரன் படத்தின் கதை.
பெண் கதாபாத்திரங்களை வழிபாட்டுக்குரியவர்களாகத் தன் படைப்புகளில் சித்தரித்து வருபவர் இயக்குநர் முத்தையா. இந்தப் படத்தின் தொடக்கமும் அப்படியொரு உணர்வுபூர்வமான அத்தியாயமே! ரத்தினச் சுருக்கமாய், அது பல விஷயங்களைப் பேசி விடுகிறது. சமூகத்தில் வேர் விட்டிருக்கும் ஆணாதிக்க மனோபாவம், குற்றவுணர்வின்றி அதைப் பெருமையாகக் கருதும் ஆண்கள், அத்தகைய ஆண்களுக்குத் துணையாக இருக்கும் 'ஆம்பளடா!' கடவுள்கள் என அந்தக் காட்சிகளில் பொதிந்திருக்...