Shadow

Tag: Kumbalangi Nights movie

கும்பளாங்கி நைட்ஸ் – அன்பால் ஒளி வீசும் கதவற்ற வீடு

கும்பளாங்கி நைட்ஸ் – அன்பால் ஒளி வீசும் கதவற்ற வீடு

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
வீடென்பது வெறும் செங்கல்லாலும் சிமெண்டாலும் கட்டப்படுவது அல்ல. அன்பின் நிறைவு மட்டுமே ஒரு வீட்டை வீடாக மாற்றவல்லது. 'கும்பளாங்கி நைட்ஸின்' கதையை இப்படி ஒற்றை வரி 'க்ளிஷே'வுக்குள் அடக்கி விடலாமா என்றால்... கூடாது. இந்தத் திரைப்படம் சொல்லும் பல்வேறு அடுக்குகளில் அதுவுமொன்று என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். எண்ணற்ற மனித உணர்வுகளின் இயல்பான வெளிப்பாடு என்றும் சொல்லலாம். வெவ்வேறு கதாபாத்திரங்களின் ஆனந்தமும் கண்ணீரும் வீழ்ச்சியும் உயர்ச்சியும், வலியும் இறுமாப்பும், காதலும், பொறாமையும், வியப்பும், மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் அவைகளை இணைக்கும் ஒற்றை இழையாக அன்பும் நிறைந்து தளும்பும் அபாரமான உணர்வெழுச்சியென்றும் அடையாளப்படுத்தலாம். சமூகத்தில் உதிரிகளாக வாழ்ந்து முடிக்கும், இலக்கற்ற வாழ்க்கையை மேற்கொள்ளும் சின்னச் சின்ன விசயங்களுக்குக் கூட அடித்து உருளும் சகோதரர்களுக்கிடையே வாழ்க்கை எப்படி...