குப்பத்து ராஜா விமர்சனம்
எதற்கும் அலட்டிக் கொள்ளாத ராக்கெட் குப்பத்திற்கே ராஜாவாகச் சுற்றி வருகிறான். திடீரென ஒருநாள் அவன் தந்தை இறந்துவிட, ராஜா நிலைகுலைகிறான். அவனது தந்தையைக் கொன்றது யாரெனவும், அக்குப்பத்தில் நிகழும் அசாம்பாவிதங்களுக்கும் காரணம் எதுவென்பதும்தான் படத்தின் கதை.
ஊர் நியாயம் என்ற கதாபாத்திரத்தில் G.V.பிரகாஷின் தந்தையாக எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ளார். மகனின் மீது பாசம் பொழிவதையும், குடிப்பதையும் தவிர வேறொன்றும் அறியாத மனிதர். அவரது மரணத்தில் இருந்துதான் படத்தின் கதை தொடங்குகிறது. படத்தின் முதற்பாதி முழுவதும் கதையே இல்லாமல், காதல், நண்பர்களுடன் ஜாலியாய் ஊர்ச் சுற்றுதல், குடி, கும்மாளம், குதூகலம் என்று காட்சிகள் விரிகிறது. முதற்பாதியின் கலகலப்பிற்கு யோகி பாபுவின் கவுன்ட்டர்கள் உதவுகின்றன.
நாயகனால் வருங்காலம் என அழைக்கப்படும் கமலா கதாபாத்திரத்தில் பாலக் லால்வானி நடித்துள்ளார். நாயகனைத் தவிர வேறு யோசன...