Shadow

Tag: Maamanithan movie

“மாமனிதன் உங்களுக்கு நெருக்கமாகி விடுவான்” – விஜய் சேதுபதி

“மாமனிதன் உங்களுக்கு நெருக்கமாகி விடுவான்” – விஜய் சேதுபதி

சினிமா, திரைச் செய்தி
தமிழ் ஓடிடி தளத்தில் கோலோச்ச ஆரம்பித்திருக்கும் ஆஹா ஓடிடி தளத்தின் அடுத்த அதிரடி வெளியீடாக, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான “மாமனிதன்” திரைப்படம் ஜூன் 14 ஆம் தேதி ஒளிபரப்பியாகியுள்ளது. இப்படத்தை இப்போது 155 நாடுகளில் ஆஹா ஓடிடி தளத்தின் வழியாகக் கண்டுகளிக்கலாம். மாமனிதன் படம் ஓடிடியில் வெளியாவதையொட்டி, இப்படத்தின் நன்றி அறிவித்தலும், பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடைபெற்றது. இயக்குநர் சீனு ராமசாமி, “கலாப்பிரியாவின் கவிதை ஒன்று இருக்கிறது. காயங்களோடு இருப்பவனை விரட்டிக் கொத்தும் காக்கையைப் பற்றியது. அப்படி காயத்தோடு இருந்த ஒரு படைப்பைத் தங்கள் தோளில் தூக்கி உலகம் முழுக்க கொண்டு சேர்த்த பத்திரிக்கை நண்பர்களுக்கு என் மகள்களின் கைகளால் நன்றி சொல்கிறேன். நீங்கள் இல்லையென்றால் இந்தப் படம் இல்லை. ஒரு படத்தின் வெற்றி என்பது இந்தக் காலத்தில் பல அடுக்குகளாக இருக்கிறது. தயாரிப்பாளருக்கு...
மாமனிதன் விமர்சனம்

மாமனிதன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தென்மேற்கு பருவக்காற்று, இடம் பொருள் ஏவல், தர்மதுரை படங்களைத் தொடர்ந்து, நான்காவது முறையாக இயக்குநர் சீனு ராமசாமியும், விஜய் சேதுபதியும் இணைந்துள்ளனர். ஆட்டோ ஓட்டுநரான ராதாகிருஷ்ணன், குடும்பத்தைக் கைகழுவி, வீட்டை விட்டு ஓடித் தலைமறைவாகிறார். ஏன் ஓடினார், எங்கே ஓடினார், மீண்டும் குடும்பத்துடன் இணைந்தாரா இல்லையா என்பதுதான் குடும்பத்தின் கதை. ராதாகிருஷ்ணனாக விஜய்சேதுபதியும், அவரது மனைவியாக காயத்ரியும் நடித்துள்ளனர். படத்தின் தொடக்கம், விஜய் சேதுபதி – காயத்ரி இணையின் அழகான கூட்டினைக் காட்டி, அவர்கள் இருவரும் எப்படிக் காதலித்து மணம் புரிந்தார்கள் என்ற அத்தியாயமே! விஜய்சேதுபதியின் மகளாக நடித்துள்ள மானஷ்வி வரும் ஃப்ரேம்கள் அனைத்துமே கவிதை. மிக யதார்த்தமாக, மனதைக் கொள்ளை கொள்ளும் அந்த அத்தியாயத்திற்குப் பிறகு, ரியல் எஸ்டேட் முதலாளியுடன் விஜய் சேதுபதி பார்ட்னர்ஷிப் போடுவதில் இருந்து, படம் ஒரு சீர...