Shadow

Tag: Maargan review in Tamil

மார்கன் விமர்சனம் | Maargan review

மார்கன் விமர்சனம் | Maargan review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
'ககன மார்க்கன்' என்றால் வான் வழியே பயணிப்பவன் எனப் பொருள். அது அப்படியே சுருங்கி மார்கன் ஆகிவிட்டது. ஒரு ஊசி போட்டால் உடல் கருகி வினோதமான முறையில் இறக்கும் வேதியியல் ஃபார்முலாவை உருவாக்கி வைத்துள்ளார் வில்லன். அப்படிக் கொடூரமாக இறக்கும் ரம்யாவின் மரணத்துடன் படம் தொடங்குகிறது. தனது மகளைப் போலவே கொல்லப்பட்டிருக்கும் ரம்யாவின் வழக்கைத் தனிப்பட்ட முறையில் விசாரிக்க சென்னை வருகிறார் காவல்துறை அதிகாரியான துருவ் கோரக். அவரது முகத்தின் இடது பக்கம் கூடக் கருப்படைந்து அரைகுறையாகச் செலுத்தப்பட்ட ஊசியால் பாதிக்கப்பட்டவராக உள்ளார். துருவ் கோரக் கொலையாளியைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் முடிவு. கொலைக்காரனால் துரத்தப்படுவதாகக் காட்டப்படும் வெண்ணிலா எனும் பாத்திரத்தில் நடித்துள்ள கனிமொழி மிகச் சிறப்பாக நடித்துள்ளார். படம் முடியும் பொழுது எல்லாக் கதாபாத்திரங்களையும் மறக்கவைக்கும் அளவிற்குச...