Shadow

Tag: Mad Max: Fury Road vimarsanam

மேட் மேக்ஸ்: ஃப்யூரி ரோட் விமர்சனம்

மேட் மேக்ஸ்: ஃப்யூரி ரோட் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
MAD MAX: FURY ROAD உலகம் முழுவதும் பாலைவனமாக மாறிவிட்டால் மனிதர்கள் என்னாவார்கள்? ஃப்யூரி ரோடின் கதைக்களமும், காலக்கட்டமும் அதான். இம்மார்ட்டன் ஜோ எனும் சர்வதிகாரியின் ஐந்து மனைவிகளைக் கடத்தி விடுகிறார் கமாண்டர் (imperator) ஃப்யூரியோஸா. தனது ஐந்து மனைவிகளைக் காப்பாற்ற மொத்த படைப்பிரிவையும் பாலைவனத்தில் இறக்குகிறார் ஜோ. சந்தர்ப்ப நெருக்கடியால், மேக்ஸ் ஃப்யூரியோஸாக்கு உதவ வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ஜோ, ஃப்யூரியோஸாவைப் பிடித்தாரா இல்லையா என்பதுதான் கதை. ஃப்யூரியோஸாவாக சார்லைஸ் தெரான். நம்மூர் இயக்குநர் பாலா தனது பட நாயகன்களின் முகத்தை உருமாற்றுவதுபோல், சார்லைஸ் தெரான் இப்படத்திற்காக கனக் கச்சிதமாக உருமாறியுள்ளார். ஃப்யூரியோஸாவாக தன்னைப் பொருத்திக் கொள்வதற்காக, மொட்டையடித்துக் கொண்டு இயக்குநருக்கு தனது புகைப்படத்தை அனுப்பி வைத்துள்ளார். இப்படம், ஒரு சூப்பர் ஹீரோயின் படம். நாயகனின் பங...