
மெட்ராஸ்காரன் – பொங்கல் கொண்டாட்டத்திற்கான படம்
SR ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் B.ஜெகதீஷ் தயாரிப்பில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், புதுமையான ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ளது “மெட்ராஸ்காரன்” திரைப்படம். ஒரு சிறு ஈகோ, ஒருவனின் வாழ்வை எந்த எல்லைக்குக் கூட்டிச்செல்லும் என்பதே இப்படத்தின் மையம். ரங்கோலி படப்புகழ் இயக்குநர் வாலி மோகன் தாஸ், இப்படத்தில் ஒரு சிறு சம்பவம் பெரும் பிரச்சனையாகி இருவர் வாழ்க்கையைப் புரட்டி எடுப்பதைப் பரபரப்பான திரைக்கதையாகப் படைத்துள்ளார். இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் சாம் சி எஸ். இசையமைத்துள்ளார். இந்த பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டமாக, வரும் 2025 ஜனவரி 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்தப் பொங்கல் கொண்டாட்டமாக திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் முன் வெளியீட்டுப் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர்...