Shadow

Tag: Mahabharatha short stories in Tamil

சக்கர வியூகம் – ஐயப்பன் கிருஷ்ணன்

சக்கர வியூகம் – ஐயப்பன் கிருஷ்ணன்

புத்தகம்
நிறைய புத்தகங்கள் வாசிக்கும் பழக்கமுடைய தோழியொருவர், தான் மகாபாரதமோ இராமாயணமோ படித்ததே இல்லை எனச் சொன்னார். ஆனால் அவர் மகாபாரதத்தின் கிளைக் கதைகள் மட்டுமன்றி, கூடுதலாகவே மகாபாரதத்தைப் பற்றி பதிப்பில் வந்திராத சில வட்டாரக் கதைகளையும் தெரிந்து வைத்திருக்கிறார். காரணம், ஜீஜா பாய்களைக் கொண்ட தேசமிது! வேலூரைச் சேர்ந்த ஐயப்பனின் தந்தை ஒரு பாரதக் கூத்துக் கலைஞர். தெருகூத்து பாரதக் கதைகளைக் கேட்டு வளர்ந்தவர். கதைகளுக்கு காது கொடுப்பது போன்ற மகிழ்வான விஷயம் வேறெதுவும் இருக்க இயலாது. அதுவும் மகாபாரதக் கதைகளைக் கேட்பதோ, படிப்பதோ எப்பொழுதும் பரவசமான ஒன்று. அதனால் தான் வியாசர் பறந்த வானில் பறக்க தைரியமாக முயல்கிறார் ஜெயமோகன். தெரிந்த கதைகள் தானெனினும், சொல்பவரின் கற்பனைக்கேற்ப புதிய நிறங்களைப் பெற்ற வண்ணமிருப்பதே பாரதத்தின் சிறப்பு. அத்தகைய சிறப்பு, ஐயப்பனின் சிறுகதைத் தொகுப்பான சக்கர வியூகத்திற்கும் ...