‘மீல் டிக்கெட்’ எனும் அட்சய பாத்திரம்
இந்த வருடம் வந்த, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மிக முக்கியமான திரைப்படம், The Ballad of Buster Scruggs 2018 (பஸ்டர் ஸ்க்ரக்ஸுடைய பிரபலமான பாடல்).
கோயன் சகோதரர்கள் எழுதி இயக்கியது. கோயன் சகோதரர்கள் சம கால ஹாலிவுட்டின் தனித்துவமான படைப்பாளர்கள். Fargo, No country for old man போன்ற என்றும் நினைவில் தங்கும் படங்களை அளித்தவர்கள்.
இந்தத் திரைப்படம் Western ஜானரில் Anthology வகையைச் சார்ந்த திரைப்படம். Western ஜானர் என்றாலே பரந்த வறட்டு நிலங்கள், குதிரையுடன் சுற்றும் கௌபாய்கள், சாரட் வண்டி, கிளாசிக்கான இசை என்று 200 வருடங்களுக்கு முந்தைய அமெரிக்க நிலப்பரப்பின் கதைகள் உற்சாகம் தரும்.
அந்தப் பின்னணியில், ஒரு நாவலைப் போல இரண்டு மணி நேரம் ஒரு கதையைக்கூறாமல், சிறுகதைத் தொகுப்பைப் போல 6 குறும்படங்களை இரண்டு மணி நேரத்தில் அடக்கியிருக்கிறார்கள். இந்த வகை anthology படங்களில் சில வருடங்களுக்கு முன்னாடி வ...