
மொய் விருந்து – ஓர் ஊரே ஒழுக்கமாக வாழும்
எஸ்கே ஃப்லிம்ஸ் இன்டர்நேஷ்னல் சார்பில் S. கமலகண்ணன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் C.R. மணிகண்டன் இயக்கத்தில், ஓர் அழகான ஃபேமிலி எமோஷ்னல் டிராமாவாக உருவாகியுள்ள 'மொய் விருந்து' படத்தின் அசத்தலான டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் சில கிராமங்களில் இன்றும் நடைமுறையில் இருக்கும் பாரம்பரியமான மொய் விருந்து எனும் பழக்கம் தான் இந்தப் படத்தின் மையக்கருவாகும். மஞ்சப்பை, கடம்பன், மைடியர் பூதம் படங்களில் பணியாற்றிய C.R. மணிகண்டன் இப்படத்தை இயக்கியுள்ளார்.இயக்குநர் C.R. மணிகண்டன், “நான் பேராவூரணி எனும் ஊருக்குஸ் சென்றபோது, 'மொய்விருந்து' நடப்பதைப் பார்த்தேன். கோடிக்கணக்கில் மொய் வரும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஒரு குடும்பம் மூன்று வருடத்திற்கு ஒரு முறை தான் மொய் விருந்து நடத்த முடியும். ஏனென்றால், அந்த 3 வருடத்தில் அவர்கள் வாங்கிய மொய்ப்பணத்தை திருப்பிச் செய்ய வேண்டு...

