
Moment Entertainments-இன் ஃபர்ஸ்ட் காப்பி தயாரிப்பு
மோ, மாயோன் முதலிய திரைப்படங்களை ஃபர்ஸ்ட் காப்பி முறையில் வெற்றிகரமாகத் தயாரிப்பதில் முத்திரை பதித்த ஜி. ஏ. ஹரிகிருஷ்ணன் தலைமையிலான மொமண்ட் என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம், தனது மூன்றாவது படைப்பாக மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக மெட்ராஸ் மேட்னி படத்தைத் தயாரித்துள்ளது. கார்த்திகேயன் மணி தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி கிஷோர், ரோஷினி ஹரிப்ரியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
உலகமெங்கும், ஜூன் 6 அன்று வெளியாகி இருக்கும் 'மெட்ராஸ் மேட்னி' திரைப்படம் அதன் நேர்த்தியான தயாரிப்புக்காகப் பாராட்டுகளைப் பெற்று வரும் நிலையில், மொமண்ட் என்டர்டெயின்மெண்ட்ஸ் தனது நான்காவது படைப்பை அறிவித்துள்ளது.
செல்வராகவன், யோகி பாபு, ஜெ டி சக்கரவர்த்தி, ஷைன் டோம் சாக்கோ, சுனில் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் நடிக்கும் இப்படத்தை மொமண்ட் என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரி...


