மோசடி விமர்சனம்
நூறு கோடி ரூபாய் ஒரு மாதத்துக்குள் சம்பாதிக்க வேண்டிய நெருக்கடி கிருஷ்ணா எனும் இளைஞனுக்கு. இல்லையெனில் கிருஷ்ணாவின் மனைவி ராதாவைக் கொன்று விடுவார் அமைச்சர். கிருஷ்ணா பல வகையான மோசடிகள் செய்து பணத்தைச் சேர்க்க முயற்சி செய்கிறான். அவனால் தன் மனைவியைக் காப்பாற்ற முடிந்ததா என்பது தான் படத்தின் கதை.
படத்தின் முதற்பாதி, சதுரங்க வேட்டையை ஞாபகப்படுத்தும் விதமாக உள்ளது. முதலில் ஆசையை நன்றாகத் தூண்டிவிட்டு, அவர்களின் பணத்தைக் கறக்கிறான் கிருஷ்ணா. வயலில் புதையல் இருப்பதாக நம்ப வைத்து, அதை எடுக்கப் பூஜைக்கு அதற்கு பால் ஆமை தேவை எனச் சொல்லி பணம் பறக்கிறான். வெள்ளைப் பூனைக்கு கருப்பு டை அடித்து, கருப்பு வைரம் எனச் சொல்லி ஒரு நபரின் மூட நம்பிக்கையைக் காசாக்குகிறான். வலம்புரி சங்கின் விலை 20 கோடி பெறுமானம் என ஒருவரின் ஆசையைத் தூண்டி, 1 கோடிக்கு ஒரு சங்கை விக்கிறான். குறுக்கு வழியில் பணம் பார்க்க நினைக்...