Shadow

Tag: Mounaguru review

மெளனகுரு விமர்சனம்

மெளனகுரு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
 மெளனகரு - ஒரே பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும் தமிழ்ப் படங்கள் மத்தியில் வந்துள்ள நல்லதொரு மாற்றுப் படம்.பணத்திற்கு ஆசைப்பட்டு ஒரு கொலை செய்கிறார் காவல் துறை உதவி ஆணையர். அவருக்கு மூன்று காவல்துறை அதிகாரிகள் உதவி செய்கின்றனர். பின் அந்தத் தவறை மறைக்க அவர்கள் மேலும் தவறுகள் செய்ய வேண்டி வருகிறது. இவர்களிடம் கருணாகரன் என்னும் கல்லூரி மாணவன் சந்தர்ப்ப வசத்தால் சிக்கிக் கொண்டு அல்லாடுகிறான். கருணாகரனின் எதிர்காலம் என்ன ஆனது என்பதற்கும், தவறிழைக்கும் காவல்துறையினர்கள் நிலைமை என்ன ஆனது என்பதற்கும் பதிலுடன் படம் நிறைவுறுகிறது.மருத்துவ மாணவி ஆர்த்தி ஆக இனியா. படத்தின் நாயகி என்றே சொல்ல முடியாது. திரையில் மட்டுமே தோன்றக் கூடிய பெண் போலில்லாமல் அன்றாட வாழ்வில் நாம் காணும் எண்ணற்ற கல்லூரிப் பெண்களில் ஒருவராக தெரிகிறார்.  எந்தவித பூச்சுகளும் அற்று நெற்றியில் பருக்கள் கொண்ட பெண...