Shadow

Tag: Mr. Chandramouli review in Tamil

மிஸ்டர் சந்திரமெளலி விமர்சனம்

மிஸ்டர் சந்திரமெளலி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கார்த்திக்கும், கெளதம் கார்த்திக்கும் தந்தை மகனாகவே நடித்துள்ளதால் விசேட முக்கியத்துவம் பெற்றுள்ள படம். படத்தின் முதற்பாதி முழுவதுமே நவரச நாயகனுக்காக என்று பிரத்தியேகமாக எடுத்துள்ளனர். ஆனால், கதையோடு இயைந்து அதைக் கொடுக்காமல், இந்தக் காட்சியில் கார்த்திக் நடக்கிறார், கார்த்திக் காமெடி பண்ணுகிறார், இந்தக் காட்சியில் அவரது பிரத்தியேகமான மேனரிசம் வெளிப்படுகிறது எனக் கதையோடு ஒட்டாத காட்சிகளாக வைத்துள்ளனர். "நவரச நாயகன் கார்த்திக்கே, கெளதம் கார்த்திக்கிற்கு அப்பாவாக நடித்துள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்" என்ற ரேஞ்சிற்கு உள்ளது திரைக்கதை. மெளன ராகத்தில், ரேவதியின் தந்தையாக வரும் ரா.சங்கரன், சந்திரமெளலி என்ற கதாப்பாத்திரமாக நினைவில் என்றும் நிற்பார். ஆனால், இந்தப் படத்தில், சந்திரமெளலி என்ற பாத்திரம் தெரிந்து விடவே கூடாது; கார்த்திக், கார்த்திக்காகவே தெரியவேண்டும் என்றே மெனக்க...