Shadow

Tag: Murmur movie

மர்மர் விமர்சனம் | Murmur review

மர்மர் விமர்சனம் | Murmur review

சினிமா, திரை விமர்சனம்
தமிழின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் (Found Footage) திரைப்படம். இப்படத்தில் பின்னணி இசையும் இல்லை, மற்ற படங்கள் போல் பிரத்தியேகமான கேமரா ஒளிப்பதிவும் இல்லை. போகிற போக்கில், நாம் மொபைலிலோ, கேமராவிலோ படம்பிடிக்கும் ரா ஃபூட்டேஜ்கள் (Raw footage) போல்தான் முழுப்படமுமே உள்ளது. அமானுஷ்ய விஷயங்கள் சார்ந்த தகவல்களைப் பதிவிடும் ஏழு யூடியூபர்கள், ஜவ்வாது மலையில் இருக்கும் ஏழு கன்னிச்சாமிகள் மற்றும் மங்கை எனும் சூனியக்கார ஆவி சுற்றித் திரிவதை நேரடியாகப் பதிவு செய்யச் செல்கிறார்கள். அவர்கள் காணாமல் போகின்றனர். அவர்களைக் கண்டுபிடிக்க செல்லும் காவல் துறையினர் உடைந்து கிடக்கும் கேமராக்களைப் பறிமுதல் செய்கின்றனர். அந்த யூடியூபர்களின் கேமராவில் பதிவான ஏழு மணி நேர ஃபூட்டேஜ்களைத் தொகுத்து ஆவணப்படமாக வெளியிடப்படுகிறது. ரிஷி, மெல்வின், அங்கிதா, ஜெனிஃபர் என நான்கு யூட்யூபர்களும், காந்தா எனும் உள்ளூர்ப் பெண்ணும் ...
மர்மர் – தமிழின் முதல் Found Footage திரைப்படம்

மர்மர் – தமிழின் முதல் Found Footage திரைப்படம்

சினிமா, திரைச் செய்தி
தமிழ்த் திரையுலகில் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் (Found Footage) ஹாரர் திரைப்படம் எனும் சாதனையை மர்மர் படைத்திருக்கிறது. இந்தப் படத்தை ஹேம்நாத் நாராயணன் எழுதி இயக்கியுள்ளார். எஸ்.பி.கே. பிக்சர்ஸ் சார்பில் பிரபாகரன் மற்றும் ஸ்டான்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளன. மர்மர் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. மர்மர் படத்தின் சிறப்பு ஒப்பனையாளர் செல்டன், "இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் சிறப்பாகப் பணியாற்றி இருக்கிறார். மிகவும் சவாலாக இருந்தது. இந்தப் படத்தில் வரும் உண்மை கதாபாத்திரத்தை மூன்று நாட்கள் தொடர்ச்சியாக உண்மையில் பார்த்தது நான் தான். இதனால் எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. பிறகு திருவண்ணாமலை கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து, அங்கு எனக்கு சுத்திப் போட்டார்கள். அதன்பிறகு வந்துதான் இந்தப் படத்தில் பணியாற்றினேன்" என்று தெரிவித்தார். மர்மர் பட விநியோகஸ்த...