
புது வேகத்தில் இசையமைப்பாளர் சத்யா
'எங்கேயும் எப்போதும்' படத்தின் மூலம் வெள்ளித் திரையில் இசையமைப்பாளராக தனது இசை பயணத்தை ஆரம்பித்து, தொடர்ந்து ‘தீயா வேலை செய்யணும் குமாரு', ‘நெடுஞ்சாலை', ‘பொன்மாலை பொழுது', ‘இவன் வேற மாதிரி', ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்', ‘காஞ்சனா - 2' போன்ற ஹிட் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் C.சத்யா.
கிட்டத்தட்ட தமிழ் சினிமாவிற்கு வந்த 6 ஆண்டுகள் கடந்த C.சத்யா, இதுவரை 15 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.
சத்யா இசையமைக்கும் ஒவ்வொரு படத்திற்கும் பாடல்களுக்கான புரோகிராமிங், மிக்சிங் என அனைத்து வேலைகளும் இவர் ஒருவரே அதிக மெனக்கெட்டு அவுட்புட் கொடுப்பதில் வல்லவர் என்பதால் இவர் தேர்வு செய்யும் படங்களின் பாடல்களும் இளைஞர்கள் மத்தியில் ரிப்பீட் மோடில் இருந்து கொண்டே இருக்கிறது. இந்த மெனக்கெடலின் பொருட்டே, அவர் இசையமைத்த படங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
கோலிவுட்டின் டாப் ஹிரோக்கள் பட வாய்ப்பும் அவருக்குக...