”நீயே ஒளி இசைநிகழ்ச்சியின் தொடக்கத்தை யாரும் தவறவிட வேண்டாம்” – சந்தோஷ் நாராயணன்
‘அட்டக்கத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இசை கலைஞர் சந்தோஷ் நாராயணன். அதன் பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் கிட்டத்தட்ட ஐம்பது படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழ் ரசிகர்களிடம் தனித்துவமான இசைகலைஞர் என்ற அடையாளத்தைப் பெற்றிருக்கும் சந்தோஷ் நாராயணன்.. முதன்முதலாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் ‘நீயே ஒளி’ எனும் பெயரில் இசை நிகழ்ச்சியை நடத்துகிறார்.இது தொடர்பாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன் போது இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் துணை மேலாளர் விஜய்குமார், இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரான ‘மேக்கிங் மொமெண்ட்ஸ்’ அர்ஜுன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இதன் போது சந்தோஷ் நாராயணன் பேசியதாவது...உலகளவில் இசைநிகழ்ச்சி என்றால் திறந்தவெளியில் ஆயிரத்திற்கு ம...