
ஸ்பெஷல் ஆப்ஸ் – விமர்சனம்
டிசம்பர் 13, 2001இல், பார்லியமென்ட்டில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயற்பட்டவனைப் பத்தொன்பது வருடங்களாகத் தேடி வருகிறார் ரா (RAW) அதிகாரியான ஹிம்மத் சிங். சிறப்பு ஆப்ரேஷன் எனப் பொருள்படும் வகையில், ‘ஸ்பெஷல் ஆப்ஸ்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸை, பிரபல ஹிந்திப் பட இயக்குநரான நீரஜ் பாண்டேவின் ‘ஃப்ரைடே ஸ்டோரிடெல்லர்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும், நீரஜ், இயக்குநர் ஷிவம் நாயருடன் இணைந்து இயக்கியும் உள்ளார். இந்தியாவில் நடப்பதை ஷிவம் நாயரும், வெளிநாடுகளில் நடக்கும் பகுதிகளை நீரஜ் பாண்டேவும் தங்களுக்குள் பிரித்துக் கொண்டுள்ளனர்.
எட்டு அத்தியாயங்கள் கொண்ட இந்த இணையத் தொடர், 2001க்குப் பிறகு நடந்த முக்கியமான தீவிரவாதத் தாக்குதல்களை எல்லாம் தொட்டுச் செல்கிறது. பார்லியமென்ட் தாக்குதலை மட்டும் அப்படியே திரையில் மறு உருவாக்கம் செய்ய முனைந்துள்ளனர். அந்தத் தாக்குதலைத் தொடர்...