NGK விமர்சனம்
இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் நந்தகோபால குமரனுக்கு உரக்கடை முதலாளிகளால் பிரச்சனை எழுகிறது. அச்சிக்கலில் இருந்து எம்.எல்.ஏ.வின் உதவியோடு தப்பித்த குமரன், அரசியல் எனும் சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்து, அதன் மூலம் நல்லது செய்ய நினைக்கிறான். அரசியலைச் சுத்தம் செய்தானா அல்லது அரசியலால் அசுத்தம் அடைந்தானா என்பதுதான் படத்தின் கதை.
கட்சியின் அடிமட்ட தொண்டன் கிரியாக நடித்துள்ள பாலா சிங், கறை வேட்டியின் மகத்துவம் பற்றி குமரனுக்கு எடுக்கும் பாடம் மிகவும் அசத்தல். 'செல்வராகவன் இஸ் பேக்' எனத் துள்ளத் தொடங்கிய மனம், இரண்டாம் பாதியில் அப்படியே சொய்ங் எனத் துவண்டு விடுகிறது. குறிப்பாக, கீதா குமாரியாக நடித்திருக்கும் சாய் பல்லவி, தன் கணவன் குமரன் மீது சந்தேகப்படும் காட்சிகளை எல்லாம் பொறுத்துக் கொள்ள அதீதமான மனோசக்தி தேவைப்படுகிறது. ஏன் எடிட்டிங்கில் அந்தக் காட்சிகளை எல்லாம் தூக்காமல் விட்டார்களோ?
மிகச...