சதுரஅடி 3500 விமர்சனம்
மாஃபியாகளிடம் ரியல் எஸ்டேட் சிக்கிக் கொண்டது என்பதன் குறியீடு தான் படத்தின் தலைப்பு.
ஸ்டீஃபன் எனும் சிவில் இன்ஜினியர் அடித்துக் கொல்லப்பட்டு தூக்கில் தொங்க விடப்படுகிறார். அவரது ஆவி அந்த பில்டிங்கில் சுற்றுவதாக பீதி பரவ, அதை விசாரிக்க எஸ்.ஐ. கர்ணா நியமிக்கப்படுகிறார். ஸ்டீஃபன் கொலையிலுள்ள மர்மமென்ன என்பதுதான் படத்தின் கதை.
படம் நேரடியாகக் கதைக்குச் செல்லாமல், கதாபாத்திரங்களை அறிமுகம் செய்வதற்குப் போதுமான நேரத்தை எடுத்துக் கொள்கிறது. ரஹ்மான், நிகில் மோகன், தலைவாசல் விஜய், ஸ்வாதி தீக்ஷித், எம்.எஸ்.பாஸ்கர், கோவை சரளா, ஆகாஷ், இனியா, மனோபாலா எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளத்தின் அறிமுகம் முடிந்த பின்னும், திரைக்கதை சூடு பிடிக்காதது படத்தின் மிகப் பெரும் குறை. அதை விட கொடுமையான சங்கதி, ரஹ்மான் இரண்டே காட்சிகளில் தலைகாட்டுவதோடு மாயமாகி விடுகிறார். நாயகி ஸ்வாதி தீக்ஷித்தோ மூன்றே மூன்று காட்சியில...