ஓடு ராஜா ஓடு விமர்சனம்
எழுத்தின் மேலுள்ள ஆர்வத்தில் வேலையை விட்டு எழுத்தாளர் ஆகிவிடுகிறான் மனோகர். நர்ஸாக வேலை புரியும் அவனது மனைவி மீரா தான் குடும்பத்தைப் பார்த்துக் கொள்கிறாள். மனோகரிடம் பணம் கொடுத்து, செட்-டாப் பாக்ஸ் வாங்கி வரச் சொல்கிறாள் மீரா. தனது நண்பன் பீட்டருடன் செட்-டாப் பாக்ஸ் வாங்கக் கடைக்குப் போகும் மனோகர், ஒன்றிலிருந்து மற்றொன்றெனப் பல சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறான். அந்தச் சிக்கல்களில் இருந்து மனோகர் மீண்டு, வீட்டுக்குச் செட்-டாப் பாக்ஸ் வாங்கிக் கொண்டு போனானா என்பதுதான் படத்தின் கதை.
ஆனாலும், கதையை இப்படி நேர்க்கோட்டிற்குள் அடைத்து விட முடியாது. மூன்று கிளைக் கதைகள், மையக் கதையுடன் நான்-லீனியராக ஒட்டி உறவாடுகிறது. ஒன்று, வேஷ்டி சட்டை கேங் சகோதர்களான காளிமுத்து மற்றும் செல்லமுத்துவின் தந்தையான பெரியதேவர், தன் மகன்கள் இருவரும் ரெளடியிசத்தை விட்டுவிடவேண்டுமெனச் சத்தியம் வாங்கிக் கொள்கிறார். தந்த...