பார்த்திபனின் அனைவருக்குமான ஒத்த செருப்பு
தனது தனித்துவமான கதை மற்றும் வித்தியாசமான சினிமாக்கள் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பெற்றவர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். அவரது ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்குத் தணிக்கைக் குழுவில் ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர்.
எழுத்தாளரும் இயக்குநரும் நடிகருமான ராதாகிருஷ்ணன் பார்த்திபன், “நான் வழக்கமாக ஒரு ஸ்கிரிப்டை எழுதி, அதை உருவாக்கும் போது, தணிக்கைச் சான்றிதழ் செயல்முறையை மனதில் வைத்துக் கொள்ள மாட்டேன். சமரசம் செய்வதன் மூலம், ஸ்கிரிப்ட் அதன் தாக்கத்தை இழக்கும் என்று நான் நம்புகிறேன். ஒத்த செருப்பு சைஸ் 7 கதையும் அந்த வகையில் எழுதப்பட்டது தான். அதற்குத் தணிக்கைக் குழுவில் ‘யு’ சான்றிதழ் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னைப் பொறுத்தவரை, ஒரு படத்திற்கு இரண்டு சான்றிதழ் செயல்முறைகள் உள்ளன, ஒன்று தணிக்கைக் குழுவிடம் இருந்து வருவது, மற்றொன்று பார்வையாளர்களிடம் இருந்து வருவது. எனவே நான் எனது திரைப்படத்தை...