பாம்புசட்டை விமர்சனம்
வளர்ச்சிக்காக பாம்பு தன் தோலை (சட்டையை) உரித்துக் கொள்ளும். அதே போல், தேவையின் பொருட்டு நல்லவன் எனும் சட்டையைக் கழட்ட நிர்பந்திக்கப்படுகிறான் நாயகன். நாயகன் தன் சட்டையை உரித்துக் கொள்கிறானா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
சாக்கடையைச் சுத்தம் செய்யும் தொழிலாளியாக சார்லி நடித்துள்ளார். ஒரே ஒரு சோற்றுப் பருக்கையைக் கீழே சிந்திவிடும் தனது இளைய மகளிடம், 'அரிசியைக் குப்பைக்குப் போக விடலாமா?' என அவர் நீண்ட தர்க்கத்துடன் கேட்கும் கேள்விக்குத் திரையரங்கில் கரவொலி எழுகிறது. சமீபமாய் வரும் படங்களில் சார்லி தான் ஏற்கும் குணசித்திர கதாபாத்திரங்களால் பெரிதும் ரசிக்க வைக்கிறார். இப்படத்தின் பெரும்பாலான கதாபாத்திரங்கள், சாமானிய மனிதர்களைக் கச்சிதமாகப் பிரதிபலிக்கிறது. நகைக் கடையில் வேலை செய்யும் பானு, கார்மென்ட்ஸில் வேலை பார்க்கும் கீர்த்தி சுரேஷ், ஷேர் ஆட்டோ டிரைவர் நிவாஸ் ஆதித்தன், ஃபைனான்ஸ் குருசோம...