படிக்காத பக்கங்கள் விமர்சனம்
தலைப்பாகப் பார்த்தால் கதை சொல்ல வரும் கருத்து, பெரிய பெரிய குற்றங்கள் நடக்கும் போது, அவை தொடர்பான செய்திகள் கண்ணைக் கவரும் வகையில் பெரிய எழுத்துக்களில் தலைப்புச் செய்தியாக வரும். அதே குற்றங்கள் தொடர்பான வழக்கு விசாரணையும், குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படும் ஜாமீன் தொடர்பான செய்திகளும், அவர்களின் விடுதலை தொடர்பான செய்திகளும் கண்ணில் படாத குட்டிச் செய்திகளாக பத்திரிக்கையில் வெளியாகும். பெரும்பாலும் நாம் இந்தக் குட்டிச் செய்திகளை படிக்காமல் கடந்து விடுவோம் அல்லது தவறவிட்டு விடுவோம். அவை தான் படிக்காத பக்கங்கள்.
தலைப்பும் அது சொல்ல வரும் கருத்தும் ஓகே. ஆனால் அது கதையோடு எந்த வகையில் தொடர்புடையதாக இருக்கிறது என்று கேட்டால் கதைக்கும் அதற்கும் தொடர்பே இல்லை என்பது போல் தான் இருக்கிறது.
படத்தின் கதை என்னவென்றால் நடிகை ”ஸ்ரீஜா”-வாகவே நடித்திருக்கும் யாஷிகா ஆனந்த் படப்பிடிப்பிற்காக சேலம் ஏற்காடு பகுத...