பகலறியான் விமர்சனம்
நாயகன் தான் காதலித்த பெண்ணைக் கூட்டிக் கொண்டு ஓரிரவில் ஓடிப் போக தயாராகிறான். ஓடிப் போன தன் தங்கையை தன் சகாக்களுடன் தேடி அலைகிறான் அண்ணன். இந்த நாயகன் கதாபாத்திரமும் அண்ணன் கதாபாத்திரமும் தவறான தொழில் செய்பவர்கள் என்பதால், தொழில் சார்ந்த பகையும் அந்த இரவில் இருவருக்கும் தொல்லை கொடுக்க மேற்கொண்டு நடந்தது என்ன..? என்பது தான் பகலறியானின் கதை.இப்படத்தின் கதையை வேறு மாதிரியும் கூற முடியும். சற்று ஆழமாகப் பார்த்தால் அதுதான் இப்படத்தின் கதை. ஆனால் பிரச்சனை என்னவென்றால் அதைத் தான் இயக்குநர் ட்விஸ்ட் ஆக வைத்திருக்கிறார் என்பதால் மேற்கொண்டு அது குறித்து மேலதீக தகவல்கள் கொடுக்க முடியவில்லை. கதைகளில் ட்விஸ்ட் இருக்கலாம். ஆனால் கதையவே ட்விஸ்ட் ஆக கூறும் முதல்படம் நான் பார்த்த வரையில் இதுதான்.படத்தின் கடைசி 20 நிமிடம் வரை படத்தின் கதை இதுதான் என்பது புரியாது. ஒரு காதல் ஜோடி ஓடப் பார்க்கிறது....