Shadow

Tag: Patti Cake$

பட்டி கேக்ஸ் விமர்சனம்

பட்டி கேக்ஸ் விமர்சனம்

அயல் சினிமா, திரை விமர்சனம்
நம்முள் ஏதோ ஒரு திறமை இருக்கிறது. அந்தத் திறமையைக் கொண்டு தட்டினால் வெற்றியின் கதவுகள் திறக்குமா திறக்காதா எனத் தெரியாது. திறந்தால் பிரச்சனையில்லை. ஒருவேளை திறக்காமல் போனால்? இல்லை திறந்த இடத்தில் ஏமாற்றம் மிஞ்சி நின்றால்? வாழ்வையே வெறுத்துப் போகச் செய்யும் தோல்வியும் அவமானமும் தொடர்ந்து வந்தால்? இதற்கு மேலும், இந்தத் திறமையை நம்பிக் கொண்டிருக்க வேண்டுமா என்ற விரக்தி ஏற்பட்டால்? அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகள் திறமையின் கதவுகளுக்குப் பெரும் தலைவலியாக வந்து நின்றால்? இவை எல்லாவற்றிற்கும் மேல் உங்கள் உடலமைப்பே உங்களுக்கு எதிரியாக வந்து நின்றால்? இதில் ஏதோ ஓர் 'ஆல்' நம் மீது மோதிய அடுத்த நொடியே நாம் உடைந்து நொறுங்கியிருப்போம் அல்லது நம் திறமைக்கு ஒரு வந்தனம் வைத்துவிட்டு எந்தத் திறமையின் மீது காதலும் நம்பிக்கையும் கொண்டு அலைந்தோமோ, அந்தத் திறமைக்கும் நமக்கும் சம்மந்தமே இல்லாத ஓரிடத்தில் சமரசம் ...