
பிங்க்: அமிதாப் பாத்திரத்தில் அஜித்
Bayview Projects LLP நிறுவனத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடியெடுத்து வைக்கிறார் போனி கபூர். விமர்சன ரீதியாகப் பாராட்டுகளையும், பாக்ஸ் ஆபிஸிஸ் வசூலையும் அள்ளிய “பிங்க்” எனும் ஹிந்திப் படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் இது. 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் மூலம் பாராட்டுக்களைக் குவித்த H. வினோத் இந்தப் படத்தை இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இறுதி செய்யப்பட்ட பின் விரைவில் அறிவிக்கபடுவார்கள்.
இந்தப் படம் இன்று அதிகாரப்பூர்வமாக சென்னையில் தொடங்கியது.
“ 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தில் அஜித்குமார் உடன் இணைந்து பணியாற்றிய போது, எங்கள் தயாரிப்பில் தமிழில் அவர் ஒரு திரைப்படம் நடிக்க வேண்டும் என ஸ்ரீதேவி விரும்பினார். கடந்த ஆண்டு வரை நல்ல கதை ஒன்றும் கிடைக்கவில்லை. ஒரு நாள் அஜித் பிங்க் படத்தை ரீமேக் செய்யும் எண்ணத்தைத் தெரிவித்தார். ...

