காஸி – நீர்மூழ்கி போர்க் கப்பலின் கதை
காஸி - ஒரு போர்க்களத் திரைப்படமாக உருவாகியுள்ளது. பிப்ரவரி மாத வெளியீடாக வரவுள்ள இப்படத்தில் ராணா டகுபதி,டாப்ஸி பன்னு, நாசர்,கே.கே.மேனன்,அதுல் குல்கர்னி ஆகியோர் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மறைந்த பழம்பெரும் நடிகரான ஓம்பூரி நடித்த கடைசி திரைப்படம் இது தான் என்பது பெருமைக்குரிய ஒன்றாகும். மிகப் பிரம்மாண்டமான படைப்பாக உருவாகி வரும் இப்படத்தை அறிமுக இயக்குநர் சங்கல்ப் இயக்கியுள்ளார்.
யாராலும் வீழ்த்த முடியாத நீர் முழ்கிக் கப்பலான PNS காஸியைப் பற்றி மிக ஆழமாகப் பேசும் ஒரு படைப்பாக இருக்கும். ஒளிப்பதிவாளர் மதி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தைத் தேசிய விருது வென்ற படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்ய, பல வெற்றி படங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் கே இசையமைக்கிறார். எந்தவிதச் சமரசமுமின்றி பி.வி.பி சினிமாஸ் நிறுவனம் இப்படத்தை மிகப் பிரம்மாண்டமாகத் தயாரித்த...