Shadow

Tag: Prince Tamil movie

“ப்ரின்ஸ்: எனது முதல் தீபாவளி படம்” – சிவகார்த்திகேயன்

“ப்ரின்ஸ்: எனது முதல் தீபாவளி படம்” – சிவகார்த்திகேயன்

சினிமா, திரைச் செய்தி
தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அக்டோபர் 21 ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது ‘ப்ரின்ஸ்’ திரைப்படம். சென்னையில் நடைபெற்ற பிரின்ஸ் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், ’‘இந்த ‘ப்ரின்ஸ்’ படம் மிகவும் சிம்பிளான கதை. ஒரு இந்திய பையன், பிரிட்டிஷ் பெண்ணைக் காதலிக்கிறான் என்பதுதான் கதை. ஆனால், இதில் இயக்குநர் அனுதீப் கொடுத்திருக்கும் காமெடிக்கான ட்ரீட்மென்ட்தான் படத்தில் புதிய விஷயம். காமெடி என்றால் கவுன்ட்டர் செய்யாமல் சம்பந்தமேயில்லாத வேறொரு பதில் சொல்வது சில்லியான பதில் சொல்வது என புதிய விஷயம் சொல்லியிருக்கிறோம். அனுதீப் தெலுங்கில்தான் சிந்திப்பார். அந்தக் காமெடியைத் தமிழுக்கு மாற்றிக் கொண்டு வர வேண்டும். இரண்டு தரப்பு மக்களுக்கும் பிடிக்க வேண்டும். இதை ஏன் நாம் பரிசோதித்துப் பார்க்க்க் கூடாது என நினைத்தோம். ...
சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ – தீபாவளி வெளியீடு

சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ – தீபாவளி வெளியீடு

சினிமா, திரைத் துளி
டான் படத்தின் வெற்றிக்குப் பிறகு, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவிருக்கும் புதிய படம் ‘பிரின்ஸ்’. இதில் உக்ரைன் நடிகை மரியா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், நடிகர் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படத்தைத் தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்திலிருந்து முதல் பாடலாக ‘பிம்பிலிக்கி பிலாப்பி’ என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, இரண்டாவது பாடலான ‘ஜெஸ்ஸிகா’வும் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் எனக் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாகப் படம் அக்டோபர் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 9 ஆம் தேதி இந்தப் படத்தின் இசை வ...