பியார் பிரேமா காதல் விமர்சனம்
காதல். நிறையக் காதல் எனத் தலைப்பினைப் பொருள் கொள்ளலாம்.
மிகச் சாதாரணனான ஸ்ரீகுமாரும், அதி நவீனமான சிந்துஜாவும் காதலிக்கின்றனர். ஸ்ரீகுமார்க்குக் கல்யாணம் பண்ணிக் குடும்பம் குட்டியோடு வாழ ஆசை; சிந்துஜாவிற்குத் தன் லட்சியக் கனவை அடைய கல்யாணமும் குழந்தையும் தடையாக இருக்கும் என எண்ணும் லிவ்விங் டுகெதர் யுக பெண். அப்போ இருவருக்குமிடையேயான காதல்? அதுதான் படத்தின் கதை.
படத்தில் மூன்று நாயகர்கள். ஒன்று படத்தைத் தயாரித்து, இசையமைத்துள்ள யுவன் ஷங்கர் ராஜா. அடுத்து, கலை இயக்குநர் E.தியாகராஜன். கடைசியாகப் பிரதான நாயகனெனச் சொல்லக் கூடிய அளவு இளமைத் துள்ளலை வண்ணமயமாகத் திரையில் காட்டியுள்ள ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சர்யா. பாடல் காட்சிகள் தோன்றும் பொழுதெல்லாம், திரையரங்கில் இளைஞர்களின் ஆரவாரம்தான்.
ஸ்ரீகுமாராக ஹரிஷ் கல்யாண். சிந்துஜாவாக நடித்துள்ள கதாநாயகி ரெய்ஸாவைக் காட்டிலும் க்யூட்டான முகபாவனைகளில்...