Shadow

Tag: Radial Road

மிக்ஜாம் சூறாவளியில் ஒரு நெகிழ்ச்சியூட்டும் சம்பவம்

மிக்ஜாம் சூறாவளியில் ஒரு நெகிழ்ச்சியூட்டும் சம்பவம்

மருத்துவம்
சென்னை மாநகரத்துக்குப் பெரிய பேரழிவை ஏற்படுத்தியுள்ளது மிக்ஜாம் புயல். மாநகரம் எங்கும் வெள்ள நீர் சூழ்ந்திருக்க, அடிப்படை வசதிகளைப் பாதிப்படைந்தவர்களுக்கு வழங்க இயலாத நிலை இருந்து. தாழ்வான பகுதிகளான வேளச்சேரி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் ஆகிய பகுதிகளில் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. மடிப்பாக்கம் குபேரன் நகரில் வசித்து வரும் திருமதி கற்பகம் கண்ணன் என்ற பெண் தனது கர்ப்ப காலத்தின் இறுதிக் கட்டத்தில் இருந்த சமயத்தில் அவரது வீடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இது குறித்து தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்து வந்து அவரைப் பத்திரமாக மீட்டனர். அவர்கள் விடாமுயற்சியுடன் செயல்பட்டு, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் தெருக்களில் படகு மூலம் சவாரி செய்து, அவரைச் சரியான நேரத்தில் பாதுகாப்பாக மீட்டெடுத்தனர். பிறகு 45 நிமிடங்கள் படகு சவாரி செய்து நேரத்தை வீணாக்காமல் அருகில்...
காவேரி மருத்துவமனையின் அசத்தலான மூளை ஆப்ரேஷன்

காவேரி மருத்துவமனையின் அசத்தலான மூளை ஆப்ரேஷன்

இது புதிது, மருத்துவம்
எண்பத்தொரு வயதான திருமதி கே.எஸ். தனது மகளுடன் அமெரிக்காவின் பாஸ்டனில் 15 ஆண்டுகளாக வசித்து வருகிறார். கடந்த மூன்று மாதங்களில், அவருக்கு நடப்பதிலும், அறிவாற்றல் செயல்பாட்டிலும் சிரமம் ஏற்பட்டு, அது அதிகரித்தவண்ணமும் இருந்தது. இதனால் தள்ளாட்டம் ஏற்பட்டு அடிக்கடி கீழே விழும்படியான நிலை ஏற்பட்டது. இதுவும் அவள் வீழ்ச்சிக்கு ஆளாக நேரிட்டது. இரண்டு முழங்காலிலும் மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவ வரலாற்றினைத் தவிர்த்து, வேறு எந்த தொந்தரவும் இல்லாமல் அவரது வாழ்க்கை சாதாரணமாகவே இருந்தது. அமெரிக்காவில் அவர் கலந்தாலோசித்த மருத்துவர்கள், மேற்கூறிய நடைத்தள்ளாட்டத்தோடு, திருமதி கே.எஸ். அவர்களின் வலது காதின் கேட்கும் திறன் குறைவையும், வலது கையைப் பயன்படுத்தும் போது உண்டான ஒருங்கிணைப்புக் குறைபாட்டையும் கவனித்தனர். மேலும் பரிசோதணையில், அவருக்கு மூளையில் பெரிய கட்டி இருப்பதைக் கண்டறிந்தனர். அந்தக் கட்டி...