
ராஜபுத்திரன் விமர்சனம் | Rajaputhiran review
தனது மகன் பட்டா மீது அளவற்ற பாசம் வைத்துள்ளார் செல்லய்யா. அவனை வேலைக்கே அனுப்பாமல் அரசனின் மகன் போல் சொகுசாக வளர்க்கிறார் செல்லய்யா. பார்த்துப் பார்த்துப் பொத்திப் பொத்தி வளர்க்கப்படும் பட்டா, உண்டியல் பணத்தைப் பட்டுவாடா செய்யும் தொழிலில் ஈடுபட்டுப் பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறான். தனது மகனை அப்பிரச்சனையில் இருந்து செல்லய்யா மீட்டாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
செல்லய்யாவாக பிரபு நடித்துள்ளார். ஒரு மகிழ்ச்சியான தந்தையாக மிகப் பூரிப்பாகப் படம் முழுவதும் வருகிறார். முக்கால்வாசி படம் ஓடிய பிறகு, ஒரு காட்சியில் இமான் அண்ணாச்சியிடம், "நான் வேலைக்குப் போலாம் என இருக்கேன்" என்கிறார் பிரபு. மகனை வேலைக்குப் போக விடாமல் தடுப்பதால், இவர் உழைத்து மகனைச் செல்லம் கெஞ்சுகிறார் என்ற யூகத்திற்கு வேட்டு வைத்து விடுகிறார் அறிமுக இயக்குநர் மகா கந்தன். 'சின்ன தம்பி காலத்து பிரபுவைக் காணலாம்' என இயக்குநர...


