
காதலில் நனைக்கும் மழை
ஆன்சன் பால், ரெபா மோனிகா ஜான் இணைந்து நடிக்கும் “மழையில் நனைகிறேன்” திரைப்படம் தலைப்பைப் போலவே கவிதை போன்ற காதலைச் சொல்லும் படைப்பாக உருவாகி வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கே காதலர்களின் நெருக்கத்தை, ஆழமான காதலை அழுத்திச் சொல்வதாய் அமைந்துள்ளது
படம் குறித்துப் பேசிய அறிமுக இயக்குநர் T. சுரேஷ் குமார், "இது மனதை இலகுவாக்கும் காதல் கதை. அதே நேரம் காதல் பற்றிய முதிர்வான கருத்துக்களைப் பேசும் படமாகவும் இது இருக்கும். படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் சூழ்நிலையை முதிர்ச்சியான மனநிலையில் அணுகுவார்கள். வரலாறு முழுவதும் தோல்வியடைந்த காதல் கதைகள் தான் வெகு பிரபலம். காதலர்கள் பிரிவதும், இறந்து போவதுமான காதல் கதைகள் வரலாற்றில் தொடர் வெற்றிக்கதைகளாக உலா வருகிறது. ஆனால் இப்படத்தில் ஒரு வித்தியாசமான முடிவை நீங்கள் பார்க்கலாம். இப்போது அதை வெளிப்படுத்த முடியாது. திரையில் அந்த உணர்வுகளோடு கண்டுகளி...

