Shadow

Tag: Reel thirai vimarsanam

ரீல் விமர்சனம்

ரீல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மற்றவரை ஏமாற்றி ஏய்த்துப் பிழைக்கும் நாயகனுக்கும், குடும்பச் சூழல் காரணமாய் சோரம் போகும் நாயகிக்கும் காதல் மலர்கிறது. கூடவே எதிரிகளும் உருவாகிறார்கள். நாயகனும் நாயகியும் வாழ்க்கையில் ஒன்றிணைந்தார்களா என்பதுதான் படத்தின் கதை. அரத பழசான கதை. அதனினும் தொன்மையான திரைக்கதை பாணி. மாறி வரும் கதை சொல்லல் முறையையோ, திரைப்பட வடிவத்தையோ, கொஞ்சம் கூடக் கணக்கில் எடுக்கவில்லை எழுத்தாளர் TN சூரஜ். கதையின் ஊடே கதாபாத்திரங்களை அறிமுகம் செய்யாமல், அறிமுகப் படமெனத் தனியாக நீள்கிறது. அதுவும் 80 களின் சினிமா எப்படித் தொடங்குமோ அப்படி! பெண்களை அடைய நினைக்கும் வயதான பணக்கார வில்லன். அவருக்கு வேற எந்த ஷேடும் இல்லை. அறிமுகமாகும் நொடியில் இருந்து பெண்களை வெறிக்க வெறிக்கப் பார்ப்பதும், நாயகியை அடையவேண்டும் என தன் விருப்பத்தை அருவருப்பான முறையில் வெளிப்படுத்துவதுமான அவரது கதாபாத்திரம். கிரீஷ் எனும் அந்தப் பாத்திர...