என்ன தவம் செய்தேனோ விமர்சனம்
மகளை, மாப்பிள்ளையை, அவர்களது கைக்குழந்தையைக் கொல்லத் தேடி அலையும் சாதிச் செருக்குள்ள தந்தை, ஒரு கட்டத்தில் தன் மகளைப் பெற்றதற்கு, 'என்ன தவம் செய்தேனோ!' என உணருவதுதான் படத்தின் ஒரு வரிக் கதை.
இயக்குநர் பேரரசின் உதவியாளரான முரபாசெலன் இப்படத்தை இயக்கியுள்ளார். 'மாயிலைத் தோரணம்' எனப் பெயர் சூட்டப்பட்டு சென்சார் செர்ட்டிஃபிகேட் வாங்கியுள்ளனர். சுப நிகழ்வுகளுக்குக் கட்டப்படுபவை மாயிலைத் தோரணங்கள். அப்படியொரு சுப நிகழ்வை நோக்கித்தான் படத்தின் க்ளைமேக்ஸ் நெருங்குகிறது. ஆனால், படத்தில் தொடர் 'ட்விஸ்ட்'களைத் தொடக்கம் முதலே அளித்துக் கொண்டு வருகிறார் இயக்குநர். க்ளைமேக்ஸிலும் அதைத் தொடர்கிறார்.
"பாக்கியம்மாஆ" எனத் தன் மகளை அன்போடு வாரி அணைக்கும் ஒரு தந்தையால் எப்படித் தன் மகளைக் கொல்ல வெறியோடு அலைய முடிகிறது? சாதிப் பெருமிதம் என்ற முட்டாள்த்தனம் ரத்தப்பாசத்தையும் விடக் கனமானதா என்ன? ஆனால், ஏனோ படம்...